மேற்கு வங்க நாரதா லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக நடந்துகொள்ள பணம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் இரண்டு பேர், ஒரு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் என மொத்தம் நான்கு பேரை சிபிஐ அண்மையில் கைது செய்தது.
இவ்வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம், அவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. அவர்களது ஜாமீன் தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். அதன்படி, இவ்வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகின்றது.