மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளில் வங்க மொழி கட்டாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளில் வங்க மொழி கட்டாயம்
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளிகளில் வங்க மொழி கட்டாயம்
Published on

மேற்கு வங்காள மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழியை கட்டாயமாக்கியுள்ளது அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை.

மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப்படாத ஆங்கிலவழிப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் வங்க மொழியை 2வது அல்லது 3வது மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேற்கு வங்கத்திலுள்ள ஆங்கிலவழிப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் வங்க மொழியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒரு பாடமாக 2ஆம் மொழியாகவோ, 3ஆம் மொழியாகவோ கற்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளும் வங்க மொழியைக் கற்பிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளாவில் அனைத்துப் பள்ளிகளிலும் மளையாள மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வங்க மொழிப் பாடத்தை தனது மாநிலத்தில் கட்டாயம் ஆக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com