பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா மேற்கு வங்கத்தில் இன்று தாக்கல்

உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமையை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வரைவு சட்டமசோதா, மேற்குவங்க சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்புதிய தலைமுறை
Published on

உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமையை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வரைவு சட்டமசோதா, மேற்குவங்க சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த சட்டமசோதாவின்படி, பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு, உயிர் இருக்கும் வரை சிறை தண்டனையை அனுபவிக்கும் விதமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
”கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்; கேள்விக்குப் பதிலளியுங்கள்” - மம்தா பானர்ஜிக்கு பாஜக பதில்!

மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த வரைவு மசோதா கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில், முதற்கட்ட விசாரணை அறிக்கை தயாரானதில் இருந்து 21 நாட்களில் விசாரணையை முடிக்க இந்த சட்டமசோதா வழிவகுக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தொடரில், இந்த வரைவு மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதை மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக் (Moloy Ghatak) தாக்கல் செய்ய உள்ளார்.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
கொல்கத்தா | கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் பேசியதாக வைரல் ஆகும் ஆடியோ - உண்மை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com