மேற்கு வங்கத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் !

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் !
மேற்கு வங்கத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் !
Published on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 4,72,985 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இப்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருக்கிறது. தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை கடுமையான பொது முடக்கம் அமலில் இருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 600 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்கு வங்கத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்க காலத்தை நீட்டிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அங்கு கல்லூரி, பள்ளிகள் ஆகியவை ஜூலை 31 ஆம் தேதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com