மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் சீண்டல் புகார்.. சிசிடிவி காட்சிகளை தர ஆளுநர் மாளிகை மறுப்பு!

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேற்கு வங்க ஆளுநர்
மேற்கு வங்க ஆளுநர்PT
Published on

மேற்கு வங்கஆளுநர் மீதான பாலியல் சீண்டல் குறித்தான புகாருக்கு ஆளுநர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை காவல்துறை கேட்டிருந்த நிலையில் ஆளுநர் மளிகை தர மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

மேற்கு வங்க ஆளுநர்
BIGSTORY | இந்திய குடும்பங்களின் சேமிப்பு சரிவு... காரணம் என்ன?

கடந்த வாரம் மேற்கு வங்க ஆளுநர் மீது, ஆளுநர் மாளிகையின் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டல் புகார் ஒன்றை மேற்குவங்க காவல்துறையிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்குவங்க காவல்துறையின் சிறப்பு பிரிவு இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் நிலையில், மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் செயல்பட்டு வந்த சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளது. ஆனால் காவல்துறைக்கு எவ்வித காட்சிகளையும் வழங்க வேண்டாம் என ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், அதே நேரத்தில் சிசிடிவி காட்சிகளை மேற்குவங்க மாநில பொதுமக்கள் விரும்பினால் மின்னஞ்சல் முகவரியின் மூலம் பதிவு செய்யலாம் எனவும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.

ஆனால் ஆளுநர் தரப்பில், தன் மீதான குற்றச்சாட்டு திட்டமிட்ட அரசியல் சதி எனவும் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மோசமான திட்டம் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com