கொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்

கொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்
கொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்
Published on

கொல்கத்தாவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற 17 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறம் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நில்ரதன் சர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர், பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவர் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த சில நாட்களாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இருப்பினும், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஐந்தாவது நாளாக நீடிக்கும் போராட்டத்தால், மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற 17 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறம் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவை பணியில் இல்லாத மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர்களை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு கண்டு விரைவில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் மேற்குவங்க அரசுக்கு வலியுறுத்தியது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com