மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
Published on

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 மாவட்டங்களில் இருந்து 43 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மற்றும் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பெரியளவில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது எவ்வித வன்முறை சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக ஆயிரத்து 71 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா 2ஆம் அலை மிகத்தீவிரமாக பரவுவதால் கொரோனா தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே கொரோனா காரணமாக 6, 7, 8 ஆகிய மூன்று கட்ட வாக்குப்பதிவுகளையும் ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது.

புகைப்பட உதவி: ஏஎன்ஐ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com