இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் உள்ள செல்வமானது, இங்கு வசிக்கும் 95.3 கோடி ஏழை மக்களிடம் இருக்கும் செல்வத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையின் 70 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பொருளாதார மன்றத்தின் 50வது வருடாந்திர கூட்டத்தில் ‘ ‘டைம் டூ கேர்’’ வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகில் உள்ள 2,153 கோடீஸ்வரர்களிடம் உள்ள செல்வமானது 4.6 கோடி மக்களிடம் இருக்கும் மொத்த செல்வத்தைக் காட்டிலும் அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ ‘டைம் டூ கேர்’’ வெளியிட்டுள்ள அறிக்கையானது உலகளாவிய சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையானது கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது என்றும் கடந்த ஆண்டில் இவர்களது செல்வமானது சரிவை சந்தித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமத்துவமில்லாத பொருளாதாரத்தில், பாலியல் சார்ந்த பொருளாதாரங்கள் இந்த சமத்துவமின்மைக்கு பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு செல்வந்தர் தனது பொருளாதாரத்தில் ஒரு படி உயர்வதற்கு ஏழைப் பெண்கள் மற்றும் சிறுமிகள் மிக முக்கிய பங்காற்றுகிறதாக சொல்லப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் ஒரு சாமானிய தொழிலாளி 22,277 ஆண்டுகள் உழைத்து சம்பாதிக்கும் தொகையானது ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ ஒரு ஆண்டில் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை ஒத்திருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நொடிக்கு 106 ரூபாய் என்று வைத்தால், கோடீஸ்வரர் 10 நிமிடத்தில் சம்பாதிக்கும் பணமானது ஒரு சாமானியன் ஒரு ஆண்டு சம்பாதிக்கும் பணத்தை ஒத்திருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் இதில் எந்த வித தொகையும் இல்லாமல் பெண்கள் குடும்பத்திற்காக செலவிடும் நேரமானது உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் நடத்த ஆய்வில் 22 கோடீஸ்வரர்களின் பொருளாதாரமானது ஆப்பிரிக்காவில் உள்ள பெண்கள் தனது வாழ்நாளில் சம்பாதிக்கும் செல்வத்தை விட அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண்கள் தினமும் தொகையில்லாமல் செலவிடும் 12.5 பில்லியன் மணி நேரங்களானது உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு டிரில்லியன் அமெரிக்க டாலர் பங்களிக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.