பாதுகாக்கப்பட வேண்டிய ‘அலையாத்தி காடுகள்’ : காரணம் என்ன ?

பாதுகாக்கப்பட வேண்டிய ‘அலையாத்தி காடுகள்’ : காரணம் என்ன ?
பாதுகாக்கப்பட வேண்டிய ‘அலையாத்தி காடுகள்’ : காரணம் என்ன ?
Published on

உலகில் வாழும் உயிரினங்கள் ஆண்டு தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக வெள்ளம், கடல்அரிப்பு, கடல்நீர் உட்புகுதல், பேரலைகள், புயல்கள், சூறாவளி போன்ற இயற்கை சுழற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது இயற்கை தான். ஆனால் இந்த இயற்கை நிகழ்வு, பெரும் துயரமாக மாறுவதற்கு காரணம், மனிதர்கள் இயற்கையை பாதுகாக்காமல் அழிப்பதுதான். அந்த வகையில் மேற்கண்ட அனைத்தையும் தடுக்கும் ஒரு இயற்கை வரமாக இருப்பதே அலையாத்தி தாவரங்கள்.

கடலும், நிலமும் இணையும் இடங்களில் வளரக்கூடிய இந்த அலையாத்தி காடுகள், சீற்றம் கொண்ட கடல் அலைகளை தடுக்கின்றன. கடல் அரிப்பை முறியடிக்கின்றன. நீரும் இல்லாமல், நிலமும் இல்லாமல் சேறுபோல இருக்கக்கூடிய இடத்தில் வளரும் இவை, 80 வகையான இனங்களை கொண்டவை. இந்தியாவில் கங்கையாற்றுப் படுகையான சுந்தரவனத்தில் இந்த அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த அலையாத்திகள் காணப்பட்டாலும், சுந்தரவனத்தில் காணப்படுவதே மிகப் பெரியதாகும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் பகுதியில் இவை படர்ந்துள்ளன. ஆக்சிஜன் குறைந்திருக்கும் மண்ணில், சதுப்புநில பகுதியில் வளரக்கூடிய இவை ‘சதுப்பு நில காடுகள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த காடுகளை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றைய தினம் ‘உலக அலையாத்தி காடுகள்’ தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான், நாம் இந்த அலையாத்திகளை பாதுக்காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இவை புயல்கள் மற்றும் சூறாவளிகளிடம் இருந்து நம்மை காக்கும் எனவும், புயல் காலங்களில் விலங்குகளுக்கு வாழ்விடமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com