கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடக மாநிலத்தில் நவீன உள்கட்டமைப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டத்தில் அதிக கவனம் செலுத்துவது, மருத்துவ மற்றும் பொறியியல் கல்வியை பிராந்திய மொழிகளில் வழங்குவது உள்ளிட்டவற்றில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், “பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, சிறந்த தேர்தல் அறிக்கை. கர்நாடகா மாநிலத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான திட்டம் அதில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பழங்குடியின மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் 1.25 லட்சம் கோடியாக பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என பேசியுள்ளார்.
அத்துடன், “மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் இடமிருந்தும் கர்நாடகா மக்கள் தள்ளி இருக்க வேண்டும். அவர்களுக்கு உங்களது வளர்ச்சியில் அக்கறை எதுவும் கிடையாது” எனவும் பிரதமர் கூறியுள்ளார்.