”குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து சட்டம் இயற்றுங்கள் என்றுதான் சொல்கிறோம்” ராகேஷ் திக்காயத்

”குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து சட்டம் இயற்றுங்கள் என்றுதான் சொல்கிறோம்” ராகேஷ் திக்காயத்
”குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து சட்டம் இயற்றுங்கள் என்றுதான் சொல்கிறோம்”  ராகேஷ் திக்காயத்
Published on

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் எதிர்காலத்தில் தொடரும் என்று உறுதியளித்தார். இதுகுறித்து பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்காயத் ‘குறைந்த பட்ச ஆதாரவிலை முடிவடையும் என்று நாங்கள் நினைக்கவில்லை’ என தெரிவித்தார்.

பிரதமரின் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பு பற்றி பேசிய பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட், “குறைந்தபட்ச ஆதாரவிலை முடிவுக்கு வரும் என்று நாங்கள் எப்போது சொன்னோம்? குறைந்தபட்ச ஆதாரவிலை தொடர்பாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் கூறினோம். அத்தகைய சட்டம் அமைக்கப்பட்டால், நாட்டின் அனைத்து விவசாயிகளும் பயனடைவார்கள். இப்போது, குறைந்தபட்ச ஆதார விலை மீது எந்த சட்டமும் இல்லை. இதனால் விவசாயிகள் வர்த்தகர்களால் கொள்ளையடிக்கப்படுகிறார்கள், ”என்று  தெரிவித்தார்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தின் மேல் சபையில் உரையாற்றியபோது, குறைந்தபட்ச ஆதாரவிலை எதிர்காலத்தில் இருக்கும், ஏழைகளுக்கு மலிவு ரேஷன் தொடரும், மண்டிகள் நவீனமயமாக்கப்படும், ”என்று கூறினார். மேலும் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014 முதல் விவசாயத் துறையில் மாற்றங்களைச் செய்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மூன்று பண்ணை சட்டங்களை ரத்து செய்வதோடு, குறைந்தபட்ச ஆதாரவிலை மீதான உத்தரவாத சட்டத்தை உருவாக்கவேண்டும் என்பது டெல்லி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பத்தாவது சுற்று பேச்சுவார்த்தைகளின் போது வேளாண் சட்டங்களை 18 மாத காலத்திற்கு இடைநிறுத்த மத்திய அரசு முன்வந்த போதிலும், மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய விவசாயிகள் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com