"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது" - ஷமிகா ரவி

"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது" - ஷமிகா ரவி
"நாட்டில் பொருளாதார தேக்க நிலை நிலவி வருகிறது" - ஷமிகா ரவி
Published on

இந்திய பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை நிலவி வருவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள ஷமிகா ரவி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தனியார் முதலீடுகள் குறைந்து காணப்படுகிறது. மேலும் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறைந்து உள்ளது. இதனையடுத்து பல்வேறு ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியா பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள ஷமிகா ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “நமது பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்த்திருத்தம் செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கு துறையின் கையில் விடுவது போல இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com