“கொரோனா தடுப்பூசி ஏன் அனைவருக்கும் கிடைப்பதில்லை?” என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் விளக்கம் அளித்துள்ளார். யாருக்கு அவசிய தேவை இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீசி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய ராஜேஷ் பூஷண், “ஏன் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இரண்டு நோக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இறப்பு விகிதத்தை தடுப்பது மற்றும் சுகாதார பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் அது. யாருக்கு வேண்டும் என்பதை காட்டிலும் யாருக்கு அவசியம் தேவை என்பதில் கவனம் வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் : ANI