ஜென்சன், ஸ்ருதி
ஜென்சன், ஸ்ருதிகோப்புப்படம்

கேரளா: நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேரை இழந்த பெண்... துணையாய் நின்ற காதலனும் விபத்தில் மரணம்💔!

கேரளா நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேரை இழந்த பெண்ணிற்கு அடுத்து நடந்த துயரச் சம்பவம்...
Published on

கடந்த ஜூலை 30 ம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர். உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த இயற்கை பேரிடரில், ஸ்ருதி என்பவர் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் (தாய், தந்தை, தங்கை உட்பட 9 பேரை) நிலச்சரிவில் இழந்தார்.

அச்சமயத்தில் அவர் கோழிக்கோட்டில் பணிபுரிந்து வந்ததால், நிலச்சரிவில் சிக்காமல் உயிர் பிழைத்தார். செய்வதறியாது நிற்கதியாய் இருந்த ஸ்ருதியை, அவரது காதலர் ஜென்சன்தான் தேற்றியுள்ளார். தன் மொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதிக்கு, தற்போது பேரிடியாய் வந்துள்ளது காதலர் ஜென்சனின் திடீர் மரணம். என்ன ஆனது ஜென்சனுக்கு? விரிவாக பார்க்கலாம்...

வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவு

கேரளாவின் அம்பலவயல் அருகே உள்ள ஆண்டூரைச் சேர்ந்தவர் ஜென்சன். இவரும் ஸ்ருதியும் சிறுவயது முதலே காதலித்து வந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இருவரின் திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறுவதாய் இருந்தது. அதற்குள் வயநாட்டில் இயற்கை பேரிடரானது ஏற்பட்டிருந்தது.

ஜென்சன், ஸ்ருதி
கேரளா| “இங்க நிலைமை மோசமா இருக்கு.. உடனே வாங்க” நிலச்சரிவு குறித்து முதலில் தகவல் அளித்த பெண் மரணம்!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் பலரை (தாய், தந்தை, தங்கை உட்பட 9 பேரை) இழந்த ஸ்ருதி, உள்ளூர் ஊடகங்கள் பலவற்றில் அச்சமயத்தில் பேசப்பட்டு வந்துள்ளார். அச்சமயத்தில் எல்லாம் ஸ்ருதியுடன் இருந்தது ஜென்சன்தான். குடும்பத்தை இழந்து நின்ற ஸ்ருதியை, மனரீதியாக தேற்ற கடந்த ஒன்றரை மாதங்களாக ஜென்சன் பல விஷயங்களை செய்து வந்துள்ளார். அதிலொன்றாக வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட தங்களின் திருமணத்தை அவர்கள் நினைத்தபடி டிசம்பர் மாதம் நடத்திவிடலாம் என ஜென்சன் நினைத்திருக்கிறார்.

ஜென்சன், ஸ்ருதி
ஜென்சன், ஸ்ருதி

தங்கள் திருமணம், நிலச்சரிவில் உறவுகளை இழந்தோர் மீள்வதன் அடையாளமாக இருக்கும் என கூறியிருக்கிறார் ஜென்சன். தொடர்ந்து இருவரும் கடந்த ஆக. 29 அன்று, நிலச்சரிவில் உயிரிழந்தோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று மரியாதையும் செலுத்தினர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன.

ஜென்சன், ஸ்ருதி
ஜென்சன், ஸ்ருதி

இப்படியாக ஸ்ருதியின் ஒளிக்கீற்றாக இருந்த ஜென்சன், ஸ்ருதியுடன் திருமண ஏற்பாடுகளுக்காக நேற்று (செப் 11) பயணித்துள்ளனர். இதற்காக ஸ்ருதியும், ஜென்சன் குடும்பத்தாரும் சென்றதாக தெரிகிறது. அப்போது கேரளாவின் கல்பெட்டா அருகே வெள்ளரம்குன்னு என்ற இடத்தில் எதிர்பாரா விதமாக அந்த வேனும் எதிரில் வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளன.

ஜென்சன், ஸ்ருதி
யானை அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் தூங்கிய குழந்தைகள்.. பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்!

இதில் ஜென்சன் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தோரால் அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜென்சன் மரணித்துள்ளார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், ஜென்சனின் உடல் மருந்துகளுக்கு ஒத்துழைக்காமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜென்சன் - விபத்துக்குள்ளான கார்
ஜென்சன் - விபத்துக்குள்ளான கார்

நிலச்சரிவில் மொத்த உறவினர்களையும் இழந்த ஸ்ருதிக்கு ஆறுதலாக இருந்தது ஜென்சன் மட்டுமே. ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்தில் ஜென்சனும் இறந்துள்ளதால், சொல்லிலடங்கா துயரத்தில் ஆழ்ந்துள்ளார் ஸ்ருதி. இன்று மாலை ஜென்சனின் இறுதி மரியாதை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நிலச்சரிவுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ஜென்சன் “என்ன ஆனாலும் நான் அவளைத் தனியாக விடமாட்டேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வதென மட்டுமே எனக்கு பயமாக இருக்கிறது” என்று கூறியிருந்தார். அவரது அந்த மோசமான பயம், இப்போது உண்மையாகி விட்டது.

ஜென்சன், ஸ்ருதி
ஜென்சன், ஸ்ருதி

ஜென்சன் அதை சொன்னவுடன் ஸ்ருதி, "நான் தனியாக இல்லை என்பதை அறிந்து என் பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள்" என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. மேல்நிலை நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்த ஜென்சன், எப்போதும் விபத்து குறித்த பயத்திலேயே இயல்பில் இருந்துள்ளார். நினைத்து பார்க்கவே நடுங்கும் வகையில், விதி ஸ்ருதியின் வாழ்வில் இன்னொருமுறை கோரத்தாண்டவத்தை ஆடியுள்ளதென்றே சொல்ல முடிகிறது நம்மால். ஜென்சனுடன் விபத்தில் சிக்கிய ஸ்ருதியும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com