கேரளா | வயநாடு துயரம் ஓயாத தருணம்.. வயநாடு நிலச்சரிவு பேரிடர் இறுதிச் செலவுகள்!

கேரள அரசு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு மத்திய அரசிடம் உதவி கோரியிருந்தது. அந்த உதவியில், 359 உடல்களை அடக்கம் செய்ய ரூ. 2.76 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
வயநாடு
வயநாடுகூகுள்
Published on

வயநாடு, முண்டகை சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த சோக சம்பவத்தில், பலரும் கேரள மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்தனர்.

வயநாடு
வயநாடுமுகநூல்

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அம்மாநில அரசு இதுவரை 19.67 லட்சம் செலவு செய்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.

முன்னதாக, நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு கேரள அரசு மத்திய அரசிடம் உதவி கோரியிருந்தது. அந்த உதவியில், 359 உடல்களை அடக்கம் செய்ய ரூ. 2.76 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

வயநாடு
அடுத்த 2 மணி நேரம்.. 21 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ஆனால் இதுவரை ரூ.19,67,74 செலவிடப்பட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார். இவர் புள்ளி விவரத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “மலப்புரத்தை அடுத்துள்ள நிலம்பூர், சாலியார் ஆற்றின் ஓரத்திலிருந்து 231 பேரின் சடலங்களும் 222 உடல் உறுப்புகளும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 172 பேரின் சடலங்கள், 2 பேரின் உடல் உறுப்புகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் டிஎன்ஏ பரிசோதனை முடிவில் ஆறு உடல்கள் தவறுதலாக அடையாளம் காணப்பட்டு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டது; பின் அது சரிசெய்யப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

கேரளா, வயநாடு
கேரளா, வயநாடுpt web

இதில் 53 அடையாளம் தெரியாத சடலங்களும் 212 உடல் உறுப்புகளும், அனைத்து மத பிரார்த்தனைகள் மற்றும் சம்பிரதாய மரியாதைகளுடன் புதுமலையில் தயார் செய்யப்பட்ட பொது சுடுகாட்டில் புதைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com