‘உழைத்து விளைவித்த வெங்காயத்தை கிலோ ரூ8க்கு விற்றேன்’ - கதறி அழுத விவசாயி

‘உழைத்து விளைவித்த வெங்காயத்தை கிலோ ரூ8க்கு விற்றேன்’ - கதறி அழுத விவசாயி
‘உழைத்து விளைவித்த வெங்காயத்தை கிலோ ரூ8க்கு விற்றேன்’ - கதறி அழுத விவசாயி
Published on

வெங்காயத்தை குறைந்த விலைக்கே விற்றதாக விவசாயி ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகியுள்ளது

மஹாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் வெங்காயத்துக்கு உரிய விலை இல்லை என விவசாயி ஒருவர் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் வெங்காய விவசாயிகளுக்கு இது லாபத்தை தருகிறதா என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது. மழையிலும் குளிரும் உழைத்து சாகுபடி செய்த வெங்காயத்தை கிலோ ரூ.8க்கு மட்டுமே விற்பனை செய்ததாக அந்த விவசாயி கதறி அழுகிறார். 

மகாராஷ்டிராவின் அகமத்நகரைச் சேர்ந்த விவசாயி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.8க்கு மட்டுமே விற்பனை செய்துள்ளேன். எனக்காக மழையிலும் குளிரிலும் உழைத்த வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி நான் சமாளிப்பேன். என் குடும்பத்தை எப்படி நான் ஓட்டுவேன் இந்த அரசு விவசாயிகள் குறித்து கவலை கொள்ளவில்லை. அவர்களை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை ஆகிறது. வெங்காயத்தின் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத் தேவையால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் உழைத்து சாகுபடி செய்த வெங்காயத்துக்கு விலை கிடைக்காமல் உள்ளூர் விவசாயிகள் இன்றும் கண்ணீர் சிந்துவது தொடர்கதையாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com