சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் - நாளை வெளியாகிறது பட்டியல்?

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் - நாளை வெளியாகிறது பட்டியல்?
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் - நாளை வெளியாகிறது பட்டியல்?
Published on

சுவிட்சர்லாந்தில் கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கி கணக்குகள் நாளை முதல் கிடைக்கவுள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், கறுப்பு பணத்துக்கு எதிரான அரசின் போராட்டத்தில் இது மிகுந்த முக்கியத்துவமான படிக்கல் என குறிப்பிட்டுள்ளது. மேலும், சுவிஸ் வங்கி பற்றிய ரகசியங்கள் செப்டம்பர் முதல் அம்பலமாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

சுவிட்சர்லாந்தின் வரி துறை இணைத் தலைவர் தலைமையில், கடந்த மாதம் டெல்லி வந்த அந்நாட்டின் பிரதிநிதிகள், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் பி.சி.மோடியை சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே, வரி, வங்கி கணக்குகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தானாகவே நிதி கணக்கு தகவல்களை பரிமாறும் நடைமுறைகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 

எனவே, நாளை முதல் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் தகவல்கள் பரிமாறப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 2018 ஆம் ஆண்டு முதல் இந்தத் தகவல் பரிமாறப்படும் என்றும், கணக்கு வைத்திருந்தவர்கள் மட்டுமின்றி, கணக்கை முடித்துக் கொண்டவர்களின் தகவல்களும் மத்திய அரசுக்கு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com