ட்ரம்ப் வருகையால் குடிசைப் பகுதியை மறைத்து கட்டப்படும் சுவர்..!

ட்ரம்ப் வருகையால் குடிசைப் பகுதியை மறைத்து கட்டப்படும் சுவர்..!
ட்ரம்ப் வருகையால் குடிசைப் பகுதியை மறைத்து கட்டப்படும் சுவர்..!
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை அடுத்து குஜராத்தில் உள்ள குடிசைப்பகுதியை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். அதன்படி டொனால்ட் ட்ரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களைச் சுற்றிப்பார்க்க உள்ளனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் ட்ரம்பே போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழி அழகுப்படுத்தப்படுகின்றன. அந்தவழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைத்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் சுவர்கள் எழுப்பப்பட்டு உடனடியாக இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி ஆணையர், குடிசைப்பகுதிகளை மறைக்க வேண்டிய எண்ணத்தில் சுவர் எழுப்பப்படவில்லை. ஏற்கெனவே பழுதான சுவருக்குப் பதிலாகவே புதிய சுவர் எழுப்பப்படுகிறது. சுவரின் உயரம் 4 அடிக்கு மேல் இருக்காது. இதனால் குடிசைப்பகுதி மறைந்துவிடாது'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com