தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5 மணி நிலவரப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 77.90 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 4 பிராந்தியங்களையும் சேர்த்து இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 78.14 சதவிகிதமும், காரைக்காலில் 76.64 சதவிகிதமும், மாகேவில் 69.92 சதவிகிதமும், ஏனாமில் 85.76 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஒரு அணியாகவும், என். ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் இதுவரை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ளதால் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வரிசையில் நின்று வருகின்றனர்.