தொடங்கியது 4 மாநிலத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை! எங்கு என்ன நிலவரம்?

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கைமுகநூல்
Published on

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் தொடங்கியது. மிசோராம் மாநிலத்தில் மட்டும் நாளை வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7 துவங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த வாக்குகளின் எண்ணிக்கையானது டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் மிசோரம் தவிர்த்து பிற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று திட்டமடிபடி தொடங்கியது. மிசோரத்தில் நாளை (4.12.2023) வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும் என்று அறிவிப்பானது ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை தேர்தல் முடிவுகள்... ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களானது 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி என்பதால் முடிவுகள் மிகுந்த ஆவலோடு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Modi - Rahul Gandhi
Modi - Rahul GandhiPT

முன்னதாக

- 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

- 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

- 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரின் இறப்பினை அடுத்து 119 தொகுதிகளில் நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

- 90 தொகுதிகளை சத்தீஸ்கரில் நக்ஸல் பாதிப்பு காரணமாக 2 கட்டமாக நடைபெற்ற தேர்தலானது நவம்பர் 7,17 ஆகிய தேதிகளிலும்,

- 40 தொகுதிகளை கொண்ட மிசோரத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதியும்

தேர்தலானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி (காலை 8:50 மணி)

மத்திய பிரதேசம் - பாஜக 83 இடங்களில் முன்னிலை

ராஜஸ்தான் - பாஜக 85 இடங்களில் முன்னிலை

தெலங்கானா - காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை

சத்தீஸ்கர் - காங்கிரஸ் 44 இடங்களில் முன்னிலை

என்ற நிலை உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com