டெல்லியின் சில பகுதிகளில் செல்போன் அழைப்பு, இணைய சேவை, எஸ்.எம்.எஸ் ஆகிய வசதிகளை ஏர்டெல், வோடஃபோன் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், டெல்லியின் சில பகுதிகளில் செல்போன் அழைப்பு, இணைய சேவை, எஸ்.எம்.எஸ் ஆகிய வசதிகளை தற்போது நிறுத்திவைத்துள்ளது. அரசின் உத்தரவையடுத்து, தற்போது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், மறு உத்தரவு வந்தபின் மீண்டும் சேவை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
இதேபோல டெல்லியின் சில பகுதிகளில், அரசு உத்தரவுப்படி, சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக வோடஃபோன் நிறுவனமும் தெரிவித்துள்ளது.