நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் நள்ளிரவில் கைது. எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு திட்டியதால், சித்ரா மனமுடைந்து தூக்கு மாட்டிக்கொண்டதாக தகவல்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 9 கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அமமுகவுக்கு குக்கர் சின்னம், நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி, மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்படாததால் கமல்ஹாசன் அதிருப்தி. சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைப்பதாக விமர்சனம்.
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல். தமிழகம், கேரளா உள்ளிட்ட10க்கும் அதிக மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பினர் மத்திய அமைச்சரை சந்தித்து ஆதரவு.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் வரும் 18-ஆம் தேதி திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு.
சென்னை ஐஐடி வளாகத்தில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. பாடமாக எடுத்துக் கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை செயலாளர் உறுதி.
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் புதிய திட்டங்கள் கையெழுத்து. கொரோனா காலத்திலும் தமிழகத்தில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் பெருமிதம்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் வாழ்த்து என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது. வெற்றிக்கு தேவையான எண்ணிக்கையில் தேர்வுக்குழு வாக்குகளை பெற்றார்.