விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளிகள் கோவாவில் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் மீன் இறக்கும் வேலை செய்து வருகின்றனர். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் அனைவரும் அங்கே தவித்து வருகின்றனர்.
தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும், தங்களுக்கு கொரானோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டு விடுமோ ? என அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என கடந்த இரண்டு தினங்களாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், தங்களில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா ? என மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.