நடிகர் விவேக்கின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் நினைவு இழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில, இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு “நடிகர் விவேக்கின் மரணம் வருத்தம் அளிக்கிறது. டைமிங் காமெடி, துள்ளலான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.