'சீதா, அக்பர்’ ’மிருகங்கள் பேர வச்சு பிரிக்குறீங்களே?' - VHP மனுவை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

சீதா என்ற சிங்கமும், அக்பர் என்ற சிங்கமும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ள செயல், இந்து மத உணர்வை அவமதிப்பது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்முகநூல்
Published on

இந்திய நாடு எத்தகைய ஒரு சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது என்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படியும் சிந்திக்க முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு தான் விஹெச்பி வைக்கும் கோரிக்கை இருக்கிறது.

அதாவது, சீதா என்ற சிங்கமும் அக்பர் என்ற சிங்கமும் ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பது இந்து மத உணர்வை அவமதிக்கும் வகையில் உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி பூங்காவில் 6 வயதுள்ள சீதா என்ற பெண் சிங்கமும், 7 வயதுள்ள அக்பர் என்ற ஆண் சிங்கமும் ஒரே பகுதிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க பூங்காவிற்கு இந்த இரண்டு சிங்கங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீதா மற்றும் அக்பர் என்ற பெயர் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பது இந்து மதத்தினை அவமதிக்கு செயல் என்று விஸ்வ ஹிந்து பரிஷ்த் அமைப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேற்கு வங்கம்
கந்தூரி விழா: சீர்வரிசை கொண்டுவந்த இந்துக்கள் - அன்போடு வரவேற்று விருந்து வைத்த இஸ்லாமியர்கள்!

மேலும் இது குறித்து அவர்கள் மனுவில் தெரிவிக்கையில்,”மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு அக்பர் என்ற முகலாய பேரரசர்களில் ஒருவரின் பெயரையும், வால்மீகியின் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சூட்டியுள்ளனர்.

மேற்கு வங்கம்
ம.பியில் கொடூரம்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து கொளுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்

சீதாவை இந்து மதங்களில் தெய்வமாக கொண்டாடுகிறோம். ஆகவே சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பர் துணையாக சீதா இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவின் மீதான விசாரணை வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த செய்தி வெளியான நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை கலாய்க்கும் வகையில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

NGMPC057

சிங்கங்களை வைத்து இப்படி அரசியல் செய்வது, இந்து - முஸ்லீம் இடையேயான விவாதத்தை உருவாக்குவது மிகவும் முட்டாள் தனமானது பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படியே போனால், அடுத்து சீதா சிங்கத்தை அசைவம் உண்பதில் இருந்து தடுத்து சைவ உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார். இது ஒரு கீழ்த்தரமான அரசியல் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இது குறித்து திரிணாமுல் எம்.எல்.ஏ பிர்பாஹா ஹன்ஸ்டா கூறுகையில், “அவர்கள் மோசமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சிங்கங்களுக்கு பெயர் வைக்கவில்லை. இவை திரிபுரா வனவிலங்கு பூங்காவில் இருந்து வந்தவை. நாங்கள் பெயர் வைத்ததாக கூறுவது முற்றிலும் பொய். திரிபுராவில் இந்த பெயர்களை வைத்திருக்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com