நு மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குருகிராமில் ஷோனா - நு சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'நு' மாவட்டத்தில் இன்று அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல் துறையினர் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், யாத்திரைக்கு பதிலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம் என, முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் யாத்திரை நடைபெற்ற போது வன்முறை வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.