கன்னித்தன்மையை சோதிப்பது குற்றம் - மகாராஷ்டிரா அரசு

கன்னித்தன்மையை சோதிப்பது குற்றம் - மகாராஷ்டிரா அரசு
கன்னித்தன்மையை சோதிப்பது குற்றம் - மகாராஷ்டிரா அரசு
Published on

திருமணத்துக்கு முன்பு மணப்பெண்ணின் கன்னித்தன்மையை சோதிப்பது குற்றமென்றும், அது பாலியல் துன்புறுத்தல் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது

மகாராஷ்டிராவில் உள்ள சில சமூகங்களில், திருமணமாகப்போகும் பெண்களின் கன்னித்தன்மையை சோதிப்பது வழக்கமாக உள்ளது. பாரம்பரியம் என்று கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கமுறை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவ இந்த விவகாரத்தை அம்மாநில அரசு கவனத்தில் கொண்டுள்ளது. 

பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் இந்த வழக்கமுறை குறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ரஞ்சீத் பட்டீல் சில சமூகம் சார்ந்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து பேசிய  ரஞ்சீத் பட்டீல், கன்னித்தன்மை சோதனை என்பது குற்றமாக கருதப்படும். பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டையின் கீழ் இந்த விவகாரம் கொண்டு வரப்படும். சட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கன்னித்தன்மை சோதனைக்கான தண்டனை குறித்து விரிவான விளக்கம் தரப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் கன்னித்தன்மை சோதிப்பது மட்டுமல்லாமல் கன்னித்தன்மையை சோதிக்க வலியுறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமேயாகும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com