விராட் கோலி தனது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவை விவகாரத்து செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு போன்ற காரணங்களால் திரையரங்குகள் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் தற்போது ஆன்லைன் தளங்களில் வெளியிடப்படுகின்றன. கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களின் பார்வையும் ஆன்லைன் தளங்கள் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் திரைப்படங்களாக இல்லாமல், வெப் சீரியஸ் கலாச்சாரமும் வேரூன்றி வருகிறது. சமீபத்தில் இந்தி முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள பாட்டலஸ் லோக் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த வெப் சீரிஸில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா ஷர்மா மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அந்தப் புகாரில் தன்னையும் பாஜக தலைவரையும் "பாட்டலஸ் லோக்" வெப் சீரிஸில் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் எனவே தயாரிப்பாளரான அனுஷ்கா ஷர்மா மீது எனத் தெரிவித்துள்ளார். இதனையடுக்கு புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுஷ்கா ஷர்மா மீது எஃப் ஐ ஆர் பதியப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நந்த் கிஷோர் குர்ஜார் "தேசியப் பாதுகாப்பு சட்டம் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வெப் சீரிஸ்கள் தடை செய்யப்பட வேண்டும். விராட் கோலி தேசப்பற்று மிக்கவர், அதனால் அவர் அனுஷ்கா ஷர்மாவை உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.