இஸ்திரி கடைக்காரர் ஒருவர் சட்டைத் துணிகளின் மீது தண்ணீரை கொப்பளித்து அயர்ன் பண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட் ஃபோனும், சமூக வலைதளங்களின் பயன்பாடும் மக்கள் மத்தியில் அதிகரித்ததை அடுத்து, மனிதர்கள் செய்யும் வினோதமான செயல்களையும், ஆச்சரியப்படும்படியான நடவடிக்கைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படியெல்லாம் யாராவது செய்வார்களா என்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சில வீடியோக்கள் அவ்வப்போது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
அந்த ரகத்திலான வீடியோ தான், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் ஏதோவொரு பகுதி என்பது மட்டும் தெரிகிறது.
அந்த வீடியோவில் 55 வயது மதிக்கத்தக்க இஸ்திரி கடைக்காரர் ஒருவர், தன்னிடம் அயர்ன் செய்வதற்காக வந்திருந்த ஒரு சட்டையை எடுக்கிறார். பின்னர் அருகில் இருந்த கிண்ணத்தில் இருந்த தண்ணீரை தனது வாயால் உறிஞ்சி, சட்டையின் மீது ஸ்ப்ரே செய்வதை போல கொப்பளித்துவிட்டு அயர்ன் செய்கிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் இவ்வாறு மவுத் ஸ்ப்ரே செய்துவிட்டு அந்த சட்டையை அயர்ன் செய்கிறார்.
பொதுவாக, இஸ்திரி கடைக்காரர்கள் துணியில் சுருக்கம் விழும் பகுதிகளில் இதுபோன்று தண்ணீரை தெளித்து அயர்ன் செய்வது வழக்கம். ஆனால் இவரோ தண்ணீரை கொப்பளித்து விட்டு அயர்ன் செய்கிறார்.
இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் வலைதலங்களில் அதிக முறை பகிரப்பட்டு வருகிறது. கண்டனமும், கிண்டலும் என கலவையான விமர்சனங்களையும் நெட்டீசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்ட்டில், "அந்த சட்டையின் உரிமையாளர் கடன் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த மரியாதை கிடைத்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.