4 பேர் பலி, 250 பேர் படுகாயம் - வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு; பதற்றத்தில் உத்தராகண்ட்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்pt web
Published on

ஹல்ட்வானி மாவட்டத்தில் உள்ள பன்புல்ரா காவல்நிலையம் அருகே உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி, மதரசா பள்ளியை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்துள்ளனர். இது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய சூழலில், போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மீது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் காவல்நிலையத்தை சேதப்படுத்தியதுடன், வாகனங்களுக்கும் தீவைத்துள்ளனர்.

வன்முறை காரணமாக பெரும் பதற்றம் நிலவுவதால், கூடுதல் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, இணையதள சேவை முடக்கப்பட்டதுடன், வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com