ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் | உறவினரை எதிர்த்துப் போட்டியா.. களத்தில் குதிக்கும் வினேஷ் போகத்?

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்ட்விட்டர்
Published on

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வினேஷ் போகத்தின் மனுவை எடுத்துக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், மனுமீதான தீர்ப்பினை ஒலிம்பிக் முடிவதற்குள் (ஆகஸ்ட் 11) அளிப்பதாக கூறி 3 முறை தள்ளிவைத்தது. இறுதியில், மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்X Page

இந்த நிலையில், வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில் ஓய்வை அறிவித்துள்ள மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் 39 ரன்கள்! 17 ஆண்டுகால யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு.. ருத்ரதாண்டவம் ஆடிய சமோயா அணி வீரர்!

வினேஷ் போகத்
”வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என அஞ்சினேன்”- எடைகுறைப்பு குறித்து பயிற்சியாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

வினேஷ் போகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “வருகின்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத்தும், யோகேஸ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியாவும் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

வினேஷ் போகத்தின் நெருங்கிய உறவினரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா குமாரி போகத், கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பபிதா குமாரி போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அவருக்கு எதிராக வினேஷ் போகத் களமிறங்குவார் என்று அவரது உறவினர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எந்தக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவார் எனத் தெரியவில்லை.

பெரும்பாலும், அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், கடந்த ஆண்டு பாஜக எம்பியான பிரிஜ் பூஷனுக்கு மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார் வினேஷ். இதனால் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஆயினும், அவர் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்தோ அல்லது கட்சியில் இணைவது குறித்தோ எந்த உறுதியான தகவலையும் வினேஷ் போகத் தெரிவிக்கவில்லை. தவிர, தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை|உடலில் இருந்தது150 கிராம் விந்தணுவா? பிரேதப் பரிசோதனை சொல்வது என்ன?

வினேஷ் போகத்
“He's a Darling” – நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com