மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றை அபாயகரமாக மக்கள் கடக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தேவாஸ் பகுதியின் சன்காஞ் தாலுக்காவில் ஒரு சிறு ஆறு அமைந்துள்ளது. இந்த ஆறு அங்குள்ள இரண்டு கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. எனவே ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும்.
எனினும் இந்தப் பகுதியில் சரியான பாலம் இல்லாததால் மக்கள் ஆற்றை கடக்க ஆபத்தான வழியை கடைபிடித்து வருகின்றனர். அதாவது ஆற்றின் நடுவே இரு கயிறுகளை கட்டி, அதனை பிடித்தவாறு ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு கடந்து செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மக்கள் அபாயகரமாக ஆற்றை கடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.