கைது செய்தியைப் பார்த்து விஜய் மல்லையா பரபரப்பே அடையவில்லை. வெகு சாதாரணமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இப்ப என்ன கெட்டுப் போய் விட்டது என்பது போல ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
வழக்கம்போல் இந்திய ஊடகங்கள் தான் செய்தியை பரபரப்பாக்கி விட்டன.. இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்துவது தொடர்பான விசாரணை எதிர்பார்த்தபடி தொடங்கி இருக்கிறது அவ்வளவுதான் என விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டனில் கைதானார். இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப லண்டனில் இருந்த அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். ஆனால் கைதான 3 மணி நேரத்திலேயே அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.