“விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி” - மும்பை சிறப்பு நீதிமன்றம்

“விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி” - மும்பை சிறப்பு நீதிமன்றம்
“விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி” - மும்பை சிறப்பு நீதிமன்றம்
Published on

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுமார் ‌ 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் மல்லையா தற்போது இங்கி‌லாந்தில் தஞ்ச‌ம் அடைந்துள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் பெரிய அளவில் நிதி மோசடிகள் புரிந்துவிட்டு‌ வெளிநாடு ‌த‌ப்பிச் செல்லும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வை‌க்கும் வகையில் பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்தி‌ய அரசு க‌டந்தாண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்‌ கீழ் குற்றவாளி என அறிவிக்க‌ப்பட்ட முதல் ‌தொழிலதிபர் என்ற பெயரை விஜய் மல்லையாவின் மீது நடவடிக்கைகள்‌ தீவிரமடைந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து தம்மை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவி‌ப்பதற்கு இடைக்கா‌ல தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ச‌ட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்து அதன் மூலம் அவர் பெற்ற கடன்களை அடை‌க்கும் வாய்ப்பை அரசு பெற்றுள்ளது‌. 

இந்நிலையில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது லஞ்ச, ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என பாரதிய ஜனதா கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com