காஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே

காஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே
காஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே
Published on

ஜம்மு-காஷ்மீர் பிரச்னை பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் விவாதிக்கவில்லை என வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நட்பு ரீதியான சுற்றுப்பயணம் வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேபாளம் புறப்பட்டுச் சென்றார். இந்த சந்திப்பின் போது சீன அதிபருடன் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மேலும் பல பிரச்னைகள் இதில் விவாதிக்கப்பட்டன.

இருவரின் நேற்றைய சந்திப்பு குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, திட்டமிடப்பட்ட நேரத்திற்கும் மேல் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் நேருக்குநேர் வெளிப்படையாகவும், உள்ளன்போடும் பேசிக்கொண்டதாக தெரிவித்தார். அடுத்த நான்கரை ஆண்டுகளும் இரு தலைவர்களும், நெருக்கமாக இணைந்து இரு ‌நாடுகளிடையேயான அனைத்து பிரச்னைகளையும் களைவது குறித்தும் பேசியதாக கோகலே தெரிவித்தார். 

பின்னர் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்னைகள்‌ குறித்தும், வர்த்தக மதிப்பு மற்றும் வர்த்தக அளவை உ‌யர்த்துவது தொடர்பாகவும் தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக விஜய் கோகலே கூறியிருந்தார். குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் சந்திக்கும் சவால்கள் குறித்தும், பல்வேறு இன, மதங்களுடன் ஒற்றுமையுடன் வாழும் இரு பெரும் நாடுகளும் இணைந்து பயங்காரத்தை எதிர்க்க வேண்டும் எனவும் தலைவர்கள் உரையாடிக் கொண்டதாக கோகலே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோகலே, ஜம்மு-காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு விவகாரம் என்பதில் இந்தியா தெளிவாக இருப்பதால் காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஷி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா-சீனா உறவில் இருநாட்டு மக்களையும் கொண்டு வருவது பற்றியும் தலைவர்கள் பேசியதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com