“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி

“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி
“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி
Published on

வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இழுபறி நிலையில் உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல அரசியல் விமர்சகர்களும் இந்தத் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “5 மாநில தேர்தல்களில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர் ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள். இன்றைய முடிவுகள் மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கடினமாக உழைக்க உத்வேகம் தரும். 5 மாநில தேர்தல்களில் இரவு, பகல் பாராமல் உழைத்த பாஜகவினரையும் வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com