தனிமனித தகவல் பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமையா என்ற வழக்கில் உச்சநீதிமன்ற 9 நபர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின்போது தனிமனித தகவல் பாதுகாப்பு, அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தை முடிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். கெஹர் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி மனித தகவல் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு ஆதார் தொடர்பான வழக்கின் போக்கை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.