ஆந்திராவின் புதிய தலைநகரமாக உருவாகிக்கொண்டிருக்கும் அமராவதியின் வடிவமைப்பு குறித்து எந்த ஆலோசனையும் வழங்கவில்லை என இயக்குநர் ராஜமவுலி மறுத்துள்ளார்.
ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்தபின் ஆந்திர அரசின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது என்று சந்திரபாபு நாயுடு முடிவுசெய்தார். இதையடுத்து அமராவதியை பிரம்மாண்டமாக உருவாக்குவதற்கும், அரசு கட்டடங்களை நவீன மற்றும் பாரம்பரியமிக்கதாகக் கட்டவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக பல கட்டட வல்லுநர்களையும், தொழில்நுட்ப நிபுணர்களையும் அவர் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமவுலியிடம் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜமவுலி, அமராவதி உருவாக்கத்திற்காக நான் ஆலோசகர், வடிவமைப்பாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக வெளியான செய்திகள் எதுவும் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.