கொரோனா அதிகரிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்றங்கள்!

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்றங்கள்!
கொரோனா அதிகரிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்றங்கள்!
Published on

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதிய மாற்றங்களின்படி, நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் 22,000-ல் இருந்து 15,000 ஆக குறைக்கப்படுகிறது. பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி கொண்டு வர வேண்டும் எனவும், வைகுண்டம் காத்திருப்பு அறை மற்றும் கோயிலுக்குள் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் அதிகம் கூடும் அன்ன பிரசாதக் கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறை, தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா ஆகிய இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அறைகள் ஒதுக்கீடு செய்யக் கூடிய மையங்களில் உடல் வெப்பநிலை கணக்கிடக்கூடிய தர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com