உடனடியாக சீரமைக்கப்பட்ட விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்

உடனடியாக சீரமைக்கப்பட்ட விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்
உடனடியாக சீரமைக்கப்பட்ட விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்
Published on

ரயில் தண்டவாளத்தில் மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கிச் சென்றபோது வந்தே பாரத் ரயில் 4 எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் 3 எருமை மாடுகள் உயிரிழந்தன.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின நிலையில், ரயில்வே அதிகாரிகள் விரைவில் ரயில் சீரமைக்கப்படும் என நேற்று தெரிவித்தனர். மேலும் எதிர்பாராத விதமாக எருமை மாடுகள் குறுக்கே வந்தது விட்டது. விபத்தின் போது ரயில் சுமார் 140 கிமீ வேகத்தில் வந்துகொண்டிருந்தது அப்போது பிரேக் போட்டு இருந்தால் ரயில் நிலை தடுமாறி பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும்.” என்று தெரிவித்திருந்தார்.

இன்று, மும்பை சென்ட்ரல் டெப்போவில் முன் பெட்டியின் மூக்கு கோன் கவர் புதியதாக மாற்றப்பட்டது மற்றும் கூடுதல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது. ‘’ எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com