மத்திய பல்கலைக்கழகங்களில் 20 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி நிறுவனங்களில் அதிக காலிப் பணியிடங்கள் இருப்பது நாட்டின் முக்கிய பிரச்சினை. ஆசிரியர் பணியை ஏற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மேலும், மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஏற்கனவே ஆசிரியர்களின் ஓய்வுக்காலம் 65 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.