‘மாலையில் நல்ல செய்தி வரும்’ - இறுதிகட்டத்தை எட்டியது உத்தராகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்புப்பணி..!

உத்தராகண்ட்டில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியானது 17 வது நாளாக இன்றும் நடக்கிறது. இதில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.
உத்தராகண்ட் சுரங்க விபத்து
உத்தராகண்ட் சுரங்க விபத்துட்விட்டர்
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசி என்னும் இடத்தில் அமைக்கப்பட்டு வந்த சுரங்கத்தில், கடந்த 12 ம் தேதி அன்று 55 மீட்டர் தூரத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 41 தொழிலாளர்கள் இடர்பாடுகளில் சிக்கினர்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து
உத்தராகண்ட் சுரங்க விபத்து

அவர்களை மீட்கும் பணி, கடந்த 16 நாட்களாக நடந்து வந்தது. இதில் சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன், மருந்து ஆகியவை வழங்கப்பட்டு இவர்களை மீட்பதற்கென்று பிளான் ஏ (கிடைமட்டமாக துளையிடும் பணி) மற்றும் பிளான் பி (செங்குத்தாக துளையிடும் பணி) என்ற இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான பணிகளும் நடைப்பெற்று வந்தன.

உத்தராகண்ட் சுரங்க விபத்து
Uttarakhand Tunnel உள்ளே இருந்துகொண்டு உதவிய 41 தொழிலாளர்கள்.. மீட்புக்குழுவை சேர்ந்த தமிழர் தகவல்!

இந்நிலையில் தற்போது பிளான் ஏ மூலமாக இம்மீட்பு பணி இறுதி நிலையை அடைந்துவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

17-வது நாளாக இன்றும் மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது. இதில் சமீபத்திய அப்டேட்டாக “தற்போது பிளான் ஏ மூலமாக சுமார் 53 மீட்டர் வரை தோண்டப்பட்டுள்ளது. எனவே அடுத்த சில மணி நேரத்தில் தொழிலாளர்களை வெளியே கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாது 17 நாள்களாக தொடரும் இந்த மீட்பு பணியில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் அவர்களை வரவேற்ற தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் வெளியில் வரும் தொழிலாளர்களை அழைத்து செல்ல மருத்துவக் குழுவும், ஆம்புலஸ்களும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக ஆம்புலன்ஸ் செல்லும் பாதை மேடுபள்ளம் இல்லாதவாறு சீரமைக்கப்பட்டு வருகிறது” என்று தகவல் வெளியாகி உள்ளது.

மீட்புப்பணி குறித்து பேசியுள்ள உத்தராகண்ட் முதலமைச்சர், “சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்து இன்று மாலை நல்ல செய்தி வரும். தொழிலாளர்களை மீட்க இடிபாடுகளின் பக்கவாட்டில் 52 மீ. வரை தோண்டப்பட்டுவிட்டது; இன்னும் சில மீட்டர்கள் மட்டுமே உள்ளன. அதன் பின் குழாய் அனுப்பப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் முதலமைச்சர்
உத்தராகண்ட் முதலமைச்சர்

மேலும் உத்தரகாண்டில் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக்குழு வல்லுநர் அர்னால்ட் டிக்ஸ் இது குறித்து தெரிவிக்கையில், “தொழிலாளர்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்” என்றார். விரிவான தகவல்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com