உத்தராகண்ட்: திக் திக் நிமிடங்கள்; விமானியின் துரிதமான அணுகுமுறையால் உயிர் தப்பிய பயணிகள்

கேதார்நாத் கோயிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கோயிலின் அருகில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க முடியாமல் தடுமாறியது.
மலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்
மலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்ட்விட்டர்
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கோயிலின் அருகில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க முடியாமல் தடுமாறி, அருகில் இருக்கும் பகுதியில் தரையிறங்கும் வீடியோ ஒன்றை ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்

மலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்
லக்னோ: நாட்டை உலுக்கும் சம்பவம்... நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள்... இரு பெண்கள் கைது!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்க சிவதலங்களில் முக்கியமான ஒன்று. இப்பகுதியில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் திறந்து இருக்கும். இத்தகைய நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 14 கி.மீ தொலைவு மலையை கடந்து வரவேண்டும். ஆகையால் சிலர் இக்கோயிலுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி தரிசனம் செய்து வருவார்கள் .

அதன்படி நேற்று இக்கோயிலின் தரிசனத்திற்காக பக்தர்கள் 7 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த ஹெலிகாப்டர் ஒன்றின் பின்பக்க மோட்டாரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ஹெலிகாப்டர் ஹெலிபேடில் தரை இறங்கமுடியாமல் தடுமாறியது.

இதனால் அங்கிருந்த மக்களும் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகளும் அச்சம் ஏற்பட்டது. ஆனால், விமானி துரிதமான அணுகுமுறையால் ஹெலிகாப்டரை சாதுர்யமாக அருகில் இருந்த இடத்தில் தரையிறக்கினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com