‘ரூ 2,000-க்கும் குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்க பரிந்துரை!’ - உத்தராகண்ட் அமைச்சர்

2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டிமுகநூல்
Published on

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், 2000 ரூபாய்க்கும் குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக உத்தரகாண்ட் மாநில நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தெரிவித்தார்.

சிறிய அளவிலான ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை பாதிக்கக்கூடிய சிக்கல் இருப்பதாக மேலும் ஆய்வு செய்ய ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை சமர்பித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேம்சந்த் அகர்வால் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி
புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு?

அதேநேரம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவை 2 ஆயிரம் ரூபாய்க்குள்ளாகவே நடைபெறுவது கவனிக்கதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com