உத்தராகண்ட் தடுப்பூசி பற்றாக்குறை: 18-44 வயதினருக்கு தடுப்பூசி் செலுத்துவது நிறுத்தம்

உத்தராகண்ட் தடுப்பூசி பற்றாக்குறை: 18-44 வயதினருக்கு தடுப்பூசி் செலுத்துவது நிறுத்தம்
உத்தராகண்ட் தடுப்பூசி பற்றாக்குறை:  18-44 வயதினருக்கு தடுப்பூசி் செலுத்துவது நிறுத்தம்
Published on

உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் நகரத்தில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக  18  முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பித்தோராகர் நகரம் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்தியது.

இது குறித்து பேசிய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி  "எங்களிடம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு  7500 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. ஆனால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை, அவர்களுக்கான தடுப்பூசிகள் கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குவோம்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com