முதல் நாளிலே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நர்ஸ் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

முதல் நாளிலே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நர்ஸ் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்
முதல் நாளிலே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நர்ஸ் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்
Published on

பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரீனு குமாரி (23). செவிலியர் படிப்பை முடித்திருந்த அவர், அங்கு சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் நேற்று பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அறைக்கு மாலையில் சென்ற அவர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு ரீனு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார், ரீனுவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, ரீனு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், மருத்துவமனை உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) போலீஸார் பதிவு செய்துள்ளனர். பிரேதப்பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே ரீனுவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com