”விமானத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல; பரத்வாஜ் முனிவர் தான்” - உ.பி. ஆளுநர் ஆனந்திபென்!

”ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராவணனின் சகோதரனான கும்பகர்ணன் உண்மையில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்” என உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி வருகிறது.
anandiben patel
anandiben patelPT
Published on

உத்தரப்பிரதேச பல்கலைக்கழக ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஆனந்திபென் படேல், ”மக்கள் நம்பிக்கைக்கு மாறாக, கும்பகர்ணன் ஆறு மாதங்கள் தூங்கவில்லை. அவர், ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்தார். அவர் தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை தயாரித்தார். இதனால் ராவணன் 6 மாதங்களுக்கு பொதுவெளியில் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதனால், இயந்திரங்கள் தயாரிக்கும் பணியை ஆய்வகத்தில் ரகசியமாகச் செய்ய வேண்டும். மேலும், நம் தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்குச் செல்லக்கூடாது.

மாணவர்கள், தங்கள் முன்னோர்கள் செய்த இணையற்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளைப் பாராட்டுவதற்கு பண்டைய இந்திய நூல்களைப் படிக்க வேண்டும். இந்த புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள முடியும். பண்டைய இந்தியாவின் முனிவர்கள் மற்றும் அறிஞர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை இன்றும் உலகிற்கு தந்துள்ளனர். அந்த வகையில், பரத்வாஜும் (வேதகாலத்தைச் சேர்ந்தவர் பரத்வாஜ் முனிவர். இவர், இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டிலும் குறிப்பிடப்படுகிறார்) விமானம் தயாரிப்பதற்கான யோசனையை தந்தார். ஆனால், அதன் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாடு பெற்றது. இப்போது அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்கா | தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு..? 2 கோடி குடும்பங்கள் பாதிக்க வாய்ப்பு!

anandiben patel
‘காசநோய் இல்லாத இந்தியா’ - சிறுமியை தத்தெடுத்த ஆளுநர் ஆனந்தி பென்

ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வில் மற்றும் வில்பர் ரைட், டிசம்பர் 17, 1903 அன்று அமெரிக்காவில் முதல்முறையாக விமானத்தைப் பறக்கவிட்ட பெருமைக்குரியவர்கள் ஆவர். இருப்பினும், சில பாஜக தலைவர்கள் ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள 'புஷ்பக விமானத்தில்' பறக்கும் இயந்திரத்தின் கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர். 2015இல் 102வது இந்திய அறிவியல் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை, ரைட் சகோதரர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1895இல் சௌபாட்டி மீது பறக்கும் இயந்திரத்தை ஷிவ்கர் பாபுஜி தல்படே பறக்கவிட்டதாகக் கூறியது. 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விமானங்கள் இருந்தன என்றும் அவை நாடுகளுக்கும் கிரகங்களுக்கும் இடையில் பயணிக்கும் திறன் கொண்டவை என்றும் அந்த பத்திரிகை கூறியது.

முன்னதாக ஆன்ந்திபென் படேல் பேசிய வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட், ”பட்டமளிப்பு விழாவில் இந்த ஆழ்ந்த அறிவு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மீட்டிங் வராத 99 பேர்.. ஒரேநேரத்தில் பணிநீக்கம் செய்த CEO! மோசமான அதிர்ச்சி நடவடிக்கை!

anandiben patel
உ.பி. ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com