உத்தரப்பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-வகுப்பு வரை ஆல் பாஸ் எனவும் அவர்கள் தேர்வெழுத தேவையில்லை எனவும் உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 1-8 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 23 முதல் மார்ச் 28 வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஏப்ரல் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வு எழுதாமல் நேரடியாக அடுத்த வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல உள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் 1-5 வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத தேவையில்லை எனத் தெரிவித்துள்ளன.