டெல்லி | சிவில் சர்வீஸுக்குப் படித்த ராஜஸ்தான் மாணவர்! 10 நாட்கள் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்பு!

ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டெல்லியில் தங்கி சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படித்துவந்த நிலையில் திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
murder
murderபுதிய தலைமுறை
Published on

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது நிறைந்த தீபக் குமார் மீனா. கடந்த ஜூலை மாதம் ஊரில் இருந்து புறப்பட்டு வந்த தீபக், வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் தங்கியிருந்து யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர், கடந்த 10 நாட்களாக காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தினமும் மாலை பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் தீபக், அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார்.

சடலம்
சடலம்கோப்புப் படம்

கடைசியாக செப்டம்பர் 10ஆம் தேதி அவரது குடும்பத்தினரிடம் பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவர், குடும்பத்தினரிடம் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பிறகே, தீபக்கின் தந்தை டெல்லி வந்து தன் மகனைத் தேடத் தொடங்கியுள்ளார். தீபக் தங்கியிருந்த அறை நண்பர்களும், அவர் இரண்டு நாட்களாக வரவில்லை எனத் தகவல் தந்ததையடுத்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: பணிச்சுமையால் உயிரிழந்த இளம்பெண்.. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிர்மலா சீதாராமன்.. குவிந்த கண்டனம்!

murder
தொடர்ந்து எழுந்த சர்ச்சை!யுபிஎஸ்சி ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

அதன்பிறகே, போலீசார் தீபக்கைத் தேடி வந்துள்ளனர். தவிர, அதுதொடர்பாகவும் விசாரித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, டெல்லி முகர்ஜி நகர்ப் பகுதியில் உள்ள தசரா மைதானம் அருகே, தீபக் குமார் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய உடலை போலீசார் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

Death
DeathFile Photo

காணாமல் போன இளைஞரைப் பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அவரைத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை முகர்ஜி நகர் பகுதியில் உள்ள புதர்களுக்கு அருகில் அவரது சடலம் கிடைத்தது. முகர்ஜி நகர் பகுதியில் உள்ள தசரா மைதானம் அருகே உள்ள முட்புதரில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா | 19 வயதில் பட்டத்தைத் தட்டிச் சென்ற குஜராத் அழகி!

murder
“கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” - தற்கொலை செய்த யுபிஎஸ்சி தேர்வாளர் உருக்கமான கடிதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com