போலிச் சான்றிதழ் விவகாரம் | பெண் IAS பூஜா கேட்கர் மீது வழக்குப்பதிவு.. கிடுகிடுக்கும் விசாரணை!

பூஜா கேட்கர் மீது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) இன்று (ஜூலை 19) வழக்குப்பதிவு செய்துள்ளது. அதோடு அவரது ஐ.ஏ.எஸ் பணியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு பூஜாவிற்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.
பூஜா கேட்கர்
பூஜா கேட்கர்எக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவர், வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், அதை தற்போது மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது. அதோடு உடனே முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி பூஜாவிற்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பி இருந்தது. என்றாலும், தொடர்ந்து அவர் பற்றிய விவரங்களைச் சேகரித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்திவருகின்றன.

இதையும் படிக்க: ”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!

பூஜா கேட்கர்
புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

இந்த நிலையில், பூஜா கேட்கர் மீது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) இன்று (ஜூலை 19) வழக்குப்பதிவு செய்துள்ளது. அதோடு அவரது ஐ.ஏ.எஸ் பணியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு பூஜாவிற்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரம்பை மீறி மோசடி செய்ய முயன்ற பூஜா கேட்கர் மீது தொடர் நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. தனது பெயர், தனது பெற்றோர் பெயர், தனது புகைப்படம், கையெழுத்து, இமெயில், மொபைல் நம்பர் மற்றும் முகவரி என அனைத்தை மாற்றி மோசடி செய்து இருக்கிறார். அவர் அளிக்கும் பதில் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (ஜூலை 18), மகாராஷ்டிர அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின் காத்ரே தலைமையிலான பொது நிர்வாகத் துறை (ஜிஏடி), பூஜா கேட்கர் மீதான பல குற்றச்சாட்டுகள் குறித்த தனது அறிக்கையை மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறைக்கு (டிஓபிடி) சமர்ப்பித்தது.

இதையும் படிக்க: ’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!

பூஜா கேட்கர்
”நான் குற்றவாளி அல்ல; உண்மை வெளிவரும்” - குற்றச்சாட்டிற்கு பதிலளித்த புனே பயிற்சி பெண் IAS அதிகாரி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com